சீக்கிரமா வீட்டுக்கு போங்க!! இன்னும் சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டப்போகுது!!

 
மழை

தமிழகத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்  உருவாகி வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  சற்றே நகர்ந்து தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழகம் இடையே கரையை கடக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

மழை


இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 350 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு மணிக்கு 20 கி.மீ.வேகத்தில் கரையை நோக்கி வரத் தொடங்கியுள்ளது. தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கலாம்.  நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி வருவதால் வட தமிழகத்தில் அதிகனமழை பெய்யலாம்.

மழை

அதன்படி  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யலாம். நவம்பர் 23, 24 மற்றும் 25ம் தேதிகளில் தமிழகம்,  புதுச்சேரி, காரைக்காலில்  ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம். மேலும் கடலோர மாவட்டங்களில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web