தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு! இன்றைய காலை நேர நிலவரம்!

 
தங்கம்

இன்றைய ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மவுசு தனி தான். நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகளுக்கு தங்கநகை சேமிப்பு என்பது பெரும் சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருகிறது.  நவம்பர் தொடக்கம் முதலே உச்சம் தொட்டு வரும் தங்கத்தின் விலை நடப்பு வாரத்தில் சற்றே குறைந்து வருகிறது. ஒரு நாள் இறங்கினாலும் அடுத்த நாளே தங்கத்தின் விலை அதிகரித்து வருவது நகைப்பிரியர்கள் , முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

ஆனால் இந்த வாரத் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது.  இதனால் இல்லத்தரசிகள் பெருமகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம்

இன்றைய விலை நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ள நிலையில், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,921-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமில்லாமல், ரூ.67,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web