சரியத் தொடங்கிய தங்கம்!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னையில் சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் தங்கத்திற்கான மவுசு தனி தான். நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள் இதனை பெரும் சேமிப்பாக கொள்கின்றனர். இந்தியாவில் தங்கத்தின் மீதான சேமிப்பு  கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இரட்டிப்பாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தங்கம்

மார்ச் மாதத்தில் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. அதன் பிறகே தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது. ஒரு நாள் தங்கத்தின்விலை குறைந்த போதிலும் அடுத்த நாளே இரட்டிப்பாக அதிகரித்து விடுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் நவம்பர் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை வார இறுதியில் சற்றே குறைந்து ஆறுதலை அளித்தது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ5 குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.

தங்கம்

அந்த வகையில் சென்னையில்,  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,920க்கும்,சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி  வெள்ளியின் விலை, ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.50 க்கும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 குறைந்து, ரூ.66,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web