இந்தோனேஷியா நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு!! பலர் கவலைக்கிடம்!!

 
இந்தோனேஷியா நிலநடுக்கம்


இந்தோனேசியாவில் ஜாவா தீவில் ஜாவா மாகாணத்தில் நேற்று பிற்பகல் 12மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் உருவானது.  ரிக்டர் அளவு கோலில் 5.6ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் வரலாறு காணாத அளவு மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது . ஜகார்த்தாவில் இருந்து 76 கி.மீ தொலைவு வரை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா நிலநடுக்கம்
தொடர்ந்து சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.  வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்த பொதுமக்கள்  அலறி அடித்துகொண்டு வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.  மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 162 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சிலாங்கூர் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகின. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்  மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளது.


நிலநடுக்கம் உணரப்பட்ட பிறகு  மக்கள் உயிருக்கு அஞ்சி அலறியபடி ஓடிய காட்சியும், சிலர் உடலில் அடி பட்டு ரத்தம் வடிய நின்ற காட்சிகளும் காண்பவர்களை கண்கலங்க வைத்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் அவசர கால மற்றும்  தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கண்ணீருடன் பொதுமக்கள் சேதமடைந்த வீடுகளில் இருந்து எஞ்சிய பொருட்களுடன் அரசின் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  

இந்தோனேஷியா நிலநடுக்கம்

மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்ட நிலையில் பல நகரங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்தோனேஷியா சந்தித்த மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகதான் இருக்கும் என அப்பகுதி மக்கள் கண்ணீர் பேட்டி அளித்துள்ளனர்.  நிலநடுக்கத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு  மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் தரையில் அமர வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web