எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்!! கெஞ்சிய டிடிஆர்!!

இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலும் மக்கள் ரயில்களையே தேர்வு செய்கின்றனர். சிறிது அசௌகர்யங்கள் இருந்தபோதிலும் குறைவான கட்டணம் காரணமாக ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். அதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத்திற்கு 'ஏக்தா வாராந்திர எக்ஸ்பிரஸ்’ வாராந்திர ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சுகாதாரமற்ற போர்வை, தலையணை வழங்கப்பட்டதை கண்டித்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் ரயில்வே போலீசார் சிறிது நேரம் சமாதானம் செய்தனர். அரக்கோணம், ரேணிகுண்டா வழியாக செல்லும் இந்த ரயில், அரக்கோணம், ரேணிகுண்டா ரயில் நிலையங்களில் நிற்பதில்லை. இந்த ரயில் நேற்றிரவு 10.40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் நோக்கி புறப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் திடீரென ஏ.சி. பெட்டியில் இருந்த பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில் நிறுத்தப்பட்ட பிறகு ஏ.சி. பெட்டியில் இருந்த பயணிகள் இறங்கி, 'ரயிலில் ஏ.சி. சரியாக வேலை செய்யவில்லை.
போர்வைகள் மற்றும் தலையணைகள் சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது' என கூறி, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கூச்சலிட்டனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் 'தலையணை மற்றும் போர்வைகள் மாற்றி வழங்குவதற்கான வசதிகள் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இல்லை. ரேணிகுண்டாவில் தான் அந்த வசதி உள்ளது. அங்கு ஏசி பெட்டியில் உள்ளவர்களுக்கு சுத்தமான போர்வைகள், தலையணைகள் வழங்கப்படும்' என சமாதானம் செய்ய முயன்றனர். 20 நிமிடம் நீடித்த இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு பயணிகள் போராட்டத்தை கைவிட்டு ரயிலில் ஏறினர். சுமார் 20 நிமிட தாமதத்திற்கு பிறகு ரயில் கிளம்பியது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!