அடிதூள்!! இளைஞர்களுக்கு ரூ75 லட்சம் வரை மானியம்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 
மானியம்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களை தொழில் முனைவர்களாக்கவும், தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கவும்  தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்ய மாநில வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 67 லட்சம்.  கலை, அறிவியல், மருத்துவம்  என பட்டப்படிப்புகள்  முடித்தவர்கள்  எண்ணிக்கை மட்டும் 22  லட்சம்.  இது குறித்து 2016ல் நடத்தப்பட்ட  ஆய்வறிக்கையில்   21-35 வயதுக்கு உட்பட்டவர்களில் 65%க்கும் அதிகமானவர்கள்,   தனியார் துறைகளை விட அரசு பணிகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றனர். 

இளைஞர்கள்
கடந்த 7 ஆண்டுகளில் மட்டுமே மத்திய அரசுப் பணிகளுக்கு சுமார்  22 கோடிக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில்,0.3% விண்ணப்பங்கள் மட்டுமே நிரந்தர வேலைக்கு தேந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.  டிஎன்பிஎஸ்சி  மூலம்  அதிகபட்சம் 20000 பணியிடங்களே. இதன் அடிப்பிடையில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்  மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது. 
புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் 
முதல் தலைமுறை தொழில் முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்குக் கை கொடுக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எந்தவித நித ஆதாரமும் இல்லாமல் இதன் மூலம் வங்கிக்கடன் பெற முடியும். முதல் தலைமுறை தொழில் முனைவோர் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களை மேற்கொள்ள ரூ. 75 லட்சம் வரை மானியம் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்கி  வங்கி கடன் செலுத்தும் போதே விண்ணப்பித்தாரருக்கு மானியம் விடுவிக்கப்படும்.


பயனாளிகளின் வயது 21-35 க்குள் இருக்க வேண்டும். பெண்கள்/ பிற்படுத்தப்பட்டோர்/ மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்/ பட்டியல் வகுப்பினர் / பட்டியல் பழங்குடியினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத் திறனாளிகள் / மாற்றுப் பாலினத்தவர்  என  சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது வரை தளர்வு உண்டு.
அடிப்படைத் தகுதிகள்: 
12ம் வகுப்பு முடித்தவர்கள், பட்டப்படிப்பு/டிப்ளமோ/ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.   குறிப்பாக இவர்கள்  சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அளிக்கும் 15 நாட்கள் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம். 
இந்த பயிற்சியில், தொழில் நிறுவனங்களைத் தொடங்க திட்ட அறிக்கை தயாரிப்பது, வங்கிகள் மற்றும் தமிழக தலீட்டுக் கழகத்திடம் இருந்து கடன்களைப் பெறுவதற்கான ஆலசோணைகள் வழங்கப்படும்.

பணம்
வங்கிக் கடனை திருப்பி செலுத்தும் காலம் - 5 முதல் 7 ஆண்டுகள்
தொழில் முனைவோர் பயிற்சி பற்றிய கூடுதல் தகவல்களை பெற விரும்புபவர்கள்  www.editn.in என்ற சமூக  வலைத்தளத்தின் மூலம்  தெரிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 9444556099, 9677152265, 044-22252081/22252082 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
நேரில்  அணுக வேண்டிய முகவரி: 
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
பார்த்தசாரதி கோயில் தெரு, 
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை – 600032 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web