வீடியோ!! ஒரே பைக்கில் 7பேர் , 2 நாய் , ஒரு சேவல், மூட்டை முடிச்சுக்கள்!! வீட்டையே வண்டில ஏத்திட்டீங்களேடா!!

சைக்கிளில் 2 பேர் பயணம் செய்தாலே மூச்சு இரைக்கிறது. ஆட்டோக்களிலும் , இருசக்கர வாகனங்களிலும் அதிக பேர் பயணித்தால் சாலைகளில் போக்குவரத்து காவலரை சமாளிக்க முடியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் மட்டும் எங்கிருந்தோ வீடியோக்களை பதிவிட்டு விடுகின்றனர். இந்த வீடியோக்கள் தான் அன்றைய பேசுபொருளாகவும் ஆகி விடுகின்றன.
ये अगर पकड़ा गया, इसको चालान भरने के लिए लोन लेना पड़ेगा। 😅 pic.twitter.com/pkbnD216md
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) November 18, 2022
அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் ஒரே பைக்கில் 5 குழந்தைகள் , ஒரு பெண், 2 நாய்கள், ஒரு சேவல் மற்றும் அவர்களின் உடைமைகளையும் ஏற்றிக் கொண்டு ஜாலியாக நகர் வலம் வருகிறார் குடும்பத்தலைவன். இந்தியாவை பொறுத்தவரை என்னதான் சட்டங்கள் போட்டாலும் அதனை கடைப்பிடிப்பது என்பதோ பெரிய சவால் தான். விதிமீறல்களும் சர்வ சாதாரணமாகி வருகின்றன.
அச்சம், கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பதே குறைந்து வருகிறது . இத்தகைய வீடியோக்கள் ஒரு பக்கத்தில் பார்க்க பொழுதுபோக்காக இருந்த போதிலும் சில நேரங்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இத்தகைய சூழலில் தான் ஒரு இரு சக்கர வாகனத்தில் 7 பேர் மூட்டை முடிச்சுகளுடன் , நாய், சேவல் என வீட்டை காலி செய்து இடம்பெயர்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றன. நவம்பர் 18ம் தேதி வெளியான இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானவர்கள் பார்வையிடப்பட்டு பலராலும் பகிரப்பட்டும் வருகிறது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!