வைரல் வீடியோ!! ரேஷன் கார்டில் பெயர் மாற்ற நாய் போல் குரைத்தவர்!!

 
ஸ்ரீகாந்த் குமார்


இந்தியா முழுவதும் உணவுப்பொருட்கள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கென கொடுக்கப்பட்ட சில ரேஷன் கார்டுகளில் சில நேரங்களில் பெயர், முகவரி, வயது இவைகள் அனைத்தும் மாறிவிடுவதுண்டு. இவைகளை சரிசெய்து கொள்வதற்காக அவ்வப்போது ரேஷன்கார்டு திருத்த முகாம்களும் நடத்தப்படுவதும் வாடிக்கை தான். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்தி குமார் தத்தா. இவருக்கு ரேஷன் கார்டில் தனது பெயரான ஸ்ரீகாந்தி குமார் தத்தா என்பதற்குப் பதிலாக ஸ்ரீகாந்தி குமார் 'குட்டா' என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது.  இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பெயர் மாற்றத்திற்காக நேரில் சென்றார். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தில் இருந்து வெளியே புறப்பட தயாரானார். அவர் வந்து கொண்டிருந்த காரை மறித்து  தனது கோரிக்கையை வித்தியாசமாக ஆத்திரத்துடன் முறையிட்டார். தனது புகார் மனுவை கையில் கொடுத்து நாய் போன்று குரைத்து காட்டி புகார் அளித்தார்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நாய் போன்று குரைத்து இந்த பெயரை விரைவில் மாற்றி தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வட்டார அதிகாரியும் மனுவை வாங்கி கொண்டார். இச்சம்பவம் அருகில் இருப்பவர்களை வியப்புடன் திரும்பி பார்க்க வைத்தது. அதில் ஒருவர் இக்காட்சியை தனது மொபைலில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளார். மனுவை வாங்கிய அதிகாரி விரைவில் சரி செய்து தருவதாக  கூறிவிட்டு திரும்பி சென்றார். 


அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது பெயரை மாற்ற பலமுறை பாங்குரா மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கோரியிருந்தார். ஆனால் யாரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் அரசின் அலட்சியப்போக்கு எங்களை போன்றோர்க்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. 3 முறை திருத்தத்திற்காக விண்ணப்பித்தும் பயனில்லை. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்,' எனத் தெரிவித்துள்ளார். மேலும் 'எங்களைப் போன்ற சாமானிய மக்கள் எத்தனை முறை இதுபோன்ற திருத்தத்திற்கு விண்ணப்பிப்பதில் எங்கள் நேரத்தை செலவிட முடியும்.இதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web