வைரல் வீடியோ!! சிங்கங்களுக்கு கல்தா கொடுக்கும் பசுமாடு!!

 
பசுமாடு சிங்கங்கள்

சமூக வலைதளங்களில் பலவிதமான வீடியோக்கள் வெளியாகி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துக்கின்றன. சூழ்நிலைகளை பொறுத்தே ஒருவரின் வேகமும், விவேகமும். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் சேர்த்து தான். பசியோடு இருக்கும் சிங்கங்களிடம் ஒரு பசுமாடு மாட்டிக் கொள்கிறது. அவைகளிடம் இருந்து தப்பிப்பதை தான் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயம் இது தான்.

இந்த வீடியோவின் தொடக்கம் முதலே மனது பதைபதைக்க தொடங்கி விடுகிறது. சிங்கங்கள் அந்த பசுவை என்ன செய்யுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  ஆனால், அந்த பசு நமக்கு ஆச்சரியத்தை தான் கொடுக்கிறது. பசித்த சிங்கங்கள்  அருகில் வந்த பிறகு தான் பசுமாடு அதை கவனிக்கிறது.  உடனே கொம்பால் முட்டி தம்மை தற்காத்து கொள்கிறது. அதற்குள் திட்டம் தீட்டத் தொடங்கிவிடுகிறது. மாட்டின் கொம்பால் ஆபத்து வரக்கூடும் என்பதை உணர்ந்த சிங்கங்கள், அதற்கு பின்னால் சென்று தாக்கத் தொடங்குகின்றன. சாமர்த்தியமாக மாடு, சுவரோடு ஒட்டிக் கொள்கிறது.

ஆண் சிங்கம்

முன்புறம் மட்டுமல்ல பின்புறத்திலிருந்தும் தன்னை தற்காத்துக்  கொள்கிறது. இதைக் கண்ட சிங்கங்கள் மீண்டும் மாட்டை முன்பக்கமாகவே தாக்குதல் நடத்த தயாராகின்றன. மாறி மாறி, பசுமாடு பல வித உத்திகளை பயன்படுத்தி தன்னை காத்துக் கொள்கிறது. இறுதியில், சிங்கங்கள் பசுமாட்டுடன் தோற்றுத்தான் போகின்றன.2 சிங்கங்களுடன் ஒற்றை பசுமாடு போராடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.  இந்த வீடியோ இன்ஸ்டாவிலும் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 'எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், புத்திசாலிக்கு முன்னால் தோற்றுதான் ஆக வேண்டும்' . 'புத்திசாலி பசுமாட்டுக்கு சபாஷ்!!'  ‘எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சாமர்த்தியசாலி தப்பித்து விடுவான் என பசுவிற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web