நாளைக்கு ஸ்கூல் லீவு விடுவாங்களா?! வெதர்மேன் ரிப்போர்ட்!!

 
வெதர்மேன்

தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதால் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்திருக்கும்  நிலையில், தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 21  நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

வெதர்மேன்

`` மேலும் தமிழகத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். இந்தப் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 23ம் தேதிக்கு பிறகு படிப்படியாக மழை குறையத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால்  மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


கனமழை எச்சரிக்கை குறித்து வெதர்மேன் வெளியிட்ட பதிவில் அடர்த்தியான மேற்கத்திய மேகங்கள் திங்கட்கிழமை அதிகாலை சென்னை கடலோரத்தில் நிலவும். இதனால் வடதமிழகத்தில் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கனமழை பெய்யும். மற்ற பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்யும்.   ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை இரவே கூட மழை பெய்யத் தொடங்கலாம்.

கனமழை எதிரொலி!! 23 மாவட்டங்களில் விடுமுறை !!

சரியாக மழை எப்போது பெய்யும் என சரியாக சொல்வது சற்று கடினமானது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் நாளை மழை பெய்யலாம். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை அதிகனமழை பெய்யும்.  தெற்கு ஆந்திராவிலிருந்து வடதமிழக கடலோர பகுதிகள் வரையிலான கடற்பகுதியில் இன்று முதல் 3 நாட்களுக்கு சூறை காற்று பலமாக வீசும்.  ஒருவேளை நாளையும், நாளை மறுநாளும் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கலாம் என வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web