அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!! குரூப் 1 தேர்வு எழுத சென்ற போது பரிதாபம்!!

 
கோபாலகிருஷ்ணன்

இன்று தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வுக்கான முதல் நிலை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 3.22 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வை எழுதுவதற்காக  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழாய்குடி பகுதியில் வசித்து வரும் கோபாலகிருஷ்ணன்  அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அமர்ந்து பயணம் செய்த அவர் கர்ப்பிணி பெண் ஒரு பேருந்தில் கூட்டநெரிசலில் நிற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

கோபாலகிருஷ்ணன்

அவருக்கு தன் இருக்கையை கொடுத்துவிட்டு படியில் நின்றவாறே பயணம் செய்தார். அரசு பேருந்து சுங்கச்சாவடிக்கு அருகே வரும் போது  கோபாலகிருஷ்ணன் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி கோபாலகிருஷ்ணனின் மார்பு பகுதியில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்தார். சக பயணிகள் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்தனர்.

கோபாலகிருஷ்ணன்

கோபாலகிருஷ்ணன் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குரூப்-1 தேர்வு எழுத வந்த இளைஞர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

From around the web