60 வயது மூதாட்டியிடம் எல்லைமீறல்.. என்கவுண்டரில் 25 வயது இளைஞர் கைது!

 
கைது

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 60 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பதே கான் என்ற 25 வயது வாலிபர் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. சம்பவத்தையடுத்து மூதாட்டி அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூதாட்டியை மீட்டனர். மேலும் அவர்களின் உதவியுடன் மூதாட்டி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த பதே கான் என்ற இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.

துப்பாக்கி

இந்நிலையில், அந்த நபர் பதுங்கியிருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற குற்றவாளியின் காலில் துப்பாக்கியால் சுடப்பட்டு போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web