நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து... 14 மீனவர்கள் மீட்பு; ரூ.15 லட்சம் சேதம்!

 
படகு
 

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் நடுக்கடலில் தத்தளித்த 14 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவ்விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. 

படகு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பெரியதாழையைச் சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 15ம்தேதி மீனவர்கள் 14 பேர் கடலுக்கு மீன்பிடிக்கசென்றனர். அவர்கள்மீன்பிடித்த நிலையில் நேற்று மாலை கரை திரும்பி கொண்டிருந்தனர். பொியதாழை கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் கடல் தொலைவில் கடலில் திடீரென ஆழிபேரலை ஏற்பட்டது. 

இதனால் பைபர்படகு, தொடர்ந்துசெல்ல முடியாமல் கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த மீனவர்கள் 14 பேரும் கடல்நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். ஒரு சிலர் நீந்தி கரைக்கு வந்துசேர்ந்து சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஊரில் இருந்த மற்ற மீனவர்கள், நடுக்கடலுக்குசென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை மீட்டனர். 

படகு கவிழ்ந்து கப்பல்

மேலும் பைபர் படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ராட்சத ஆழி பேரலையில் சிக்கிய பைபர் படகு சேதமானது. இன்ஜின் பழுதான நிலையில் வலைகள் முற்றிலும் சேதமானது. சுமார் ரூ.15 லட்சம்பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. இது குறித்து மீனவர்கள், மீன்வளத்துறைஅதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!