செல்ஃபி எடுக்கையில் பாறை இடுக்கில் தவறி விழுந்த கல்லூரி மாணவி... 15 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் மீட்பு!
கர்நாடகா மாநிலம் துமகுருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மைதாலா கெரேயில் பாறைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்த 19 வயது கல்லூரி மாணவியை தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகளின் வீரர்கள் 15 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நேற்று மாலை பத்திரமாக மீட்டனர். நேற்று மீட்புக் குழுவினர் கல்லூரி மாணவி ஹம்ஸாவைக் கண்டுபிடித்து பத்திரமாக மீட்கும் வரையில் 15 மணி நேரம் ஹம்சா சில பாறைகளுக்கு இடையில் சிக்கியபடியே அந்த இரவைக் கழித்தார்.
குப்பி தாலுகாவில் உள்ள சிவபுரா கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹம்சா. இவர் தனது தோழி கீர்த்தனாவுடன் மந்தரகிரியில் இருந்து திரும்பும் போது நிரம்பி வழியும் ஏரிக்கு சென்றுள்ளார். ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பி வழிந்த நிலையில், அதன் அழகில் தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்ற போது, ஹம்ஸா கீழே சில பாறைகளுக்கு இடையே தவறி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக ஹம்ஸா விழுந்த அந்த இடத்தில் அவரது முழங்கால் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்துள்ளது.
15 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட ஹம்சா, அதன் பிறகு மருத்துவமனை படுக்கையில் இருந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “மந்தாரகிரிக்கு சென்ற பிறகு நிரம்பி வழியும் ஏரியைப் பார்க்க நானும் எனது தோழியும் சென்றோம். அங்கே சில செல்ஃபி புகைப்படங்களை எடுத்து முடித்து விட்டு நாங்கள் திரும்ப வரும் போது வழுக்கி விழுந்தேன். எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சில பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டேன். எனக்கு காயம் எதுவும் பெரிதாக ஏற்படவில்லை. ஆனால் நான் முழங்காலில் தொடர்ந்து நின்றுக் கொண்டிருந்ததால் எனக்கு வலி இருக்கிறது. பாறைகள் வழியாக நான் வானத்தைப் பார்த்தேன். என்னை காப்பாற்றிய தாசில்தார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

முதன்முறையாக மீட்புப் பணியாளர்கள் சிலர் அருகில் இருந்ததைக் கேட்டபோது சப்தம் எழுப்பினேன். ஆனால் தண்ணீரின் சத்தம் காரணமாக அவர்களால் என் சப்தத்தைக் கேட்க முடியவில்லை என்று ஹம்சா கூறினார். "ஆனால் இரண்டாவது குழு அருகில் வந்த போது, நான் இன்னும் பலமாக சத்தமாக கத்தினேன், அவர்கள் என் சப்தத்தைக் கேட்டனர்" என்றார்.வபுரத்தைச் சேர்ந்த சோமநாதன் என்பவரின் மகள் ஹம்சா. வார இறுதியில் மந்தரகிரி சென்றிருந்த போது இவ்வாறு தவறி விழுந்துள்ளார். தற்போது அவர் துமகுரு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
