மகிழ்ச்சி வெள்ளம்... களைகட்ட துவங்கியது தீபாவளி ஷாப்பிங்... அலைமோதும் மக்கள் கூட்டம்!
தங்களுக்கு தேவையான பேண்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், சேலை, வேஷ்டி துணிமணிகளை தேர்வு செய்து வாங்கினர். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விதவிதமான டிசைன்களில் துணிகள் வந்து குவிந்துள்ளது. புதிய மாடல் ஆடைகளையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் பல துணி கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இன்று காணப்பட்டது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்து இருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
சென்னையின் வர்த்தக பகுதியான தி.நகர், பழைய வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், குரோம்பேட்டை, பாடி பகுதிகளில் மக்கள் கூட்டம் காலை நேரத்திலேயே அதிகமாக காணப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாக காட்சியளித்தது. சென்னையில் உள்ள சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இரவு 10 மணி வரை இந்த கூட்டம் நீடிக்கும் எனத் தெரிகிறது. குடும்பத்துடன் தீபாவளி ஷாப்பிங்கில் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தனர். பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தீபாவளி பண்டிகையில் புத்தாடைகளுக்கு பிறகு மக்கள் மனதில் இடம் பிடிப்பது பட்டாசும், பட்சணங்களும் தான். சென்னையில் தீவுத்திடல் தெருக்களிலும் புதிதாக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி மாவட்டங்களை சார்ந்தவர்கள், கோவை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களில் மட்டும் சொந்த ஊருக்குச் செல்வதற்கு லட்சக்கணக்கானோர் அரசு பேருந்துகளில் ரயில் டிக்கெட் கிடைக்காத நிலையில் முன்பதிவு செய்துள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!