பயங்கரமான துப்பாக்கிச் சண்டை.. ஜம்மு காஷ்மீரில் பற்றி எரிந்த வீடுகள்.. பதற்றத்தில் மக்கள்!

 
ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரின் கன்வார் பகுதியில் சுற்றித் திரிந்த பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீரென துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த தாக்குதலில் அருகில் இருந்த சில வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.


அனந்த்நாக் பகுதியில் உள்ள ஹல்கன்காலி அருகே இதேபோன்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். தாக்குதலில் உயிரிழந்த இருவரில் ஒருவர் வெளிநாட்டவர் என்பதும், மற்றொருவர் உள்ளூர்வாசி என்பதும் தெரியவந்தது. துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர்

அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதுவரை இரு தரப்பிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!