ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண்... தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்த நிர்வாகி... குவியும் வாழ்த்துக்கள்!

 
கிரிஜா
 


“எனக்கு இப்போது குடும்பம் இருக்கிறது. நான் தாய், சகோதரி மற்றும் என் கணவர் ஆகியோரின் பாதுகாப்பில் வாழ்வேன்” என்று கண்களில் பரவசத்துடன் பேசுகிறார் அனாமிகா. “இனி அவளைப் பற்றிய கவலை எனக்கில்லை. என்னை விட என் மகன் இனி அவளை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்று நம்புகிறேன்” என்று நெகிழ்ச்சியாக பேசுகிறார் உதய கிரிஜா. அனாமிகாவின் மாமியார். 

கிரிஜா

கேரள மாநிலம் அடூர் தெப்புப்பாறை ஜீவமாதா காருண்ய பவன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண் அனாமிகா. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் ஜீவமாதா ஆதரவற்றோர் இல்லத்திற்கு வந்தார் அனாமிகா. அனாமிகா இளமையாக இருந்தபோதிலும், எப்போதும் அவள் முகத்தில் சோகம் வழிந்தது. துன்பங்களை அவளைத் துரத்திக் கொண்டிருந்தன. குழந்தைப் பருவத்திலேயே அனாமிகாவின் தாய் இறந்து விட்டார். அதன் பின்னர் அனாமிகாவின் தந்தை இரண்டாவதாக வேறொரு திருமணம் செய்துக் கொண்டு அனாமிகாவைக் கைவிட்டார். அதன் பின்னர் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த அனாமிகா, விரைவில் தன் பாட்டியும் உடல்நலக்குறைவால் மரணமடைய அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பி நின்றாள். 

அதன் பின்னர் தான் ஆதரவற்றோர் இல்லத்தில் சரணடைந்தாள். ஒரு நாள் ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகி உதய கிரிஜா, அனாமிகா பள்ளியில் இருந்து திரும்பி வருவதைக் கவனித்தார். அதன் பின்னர் அனாமிகா அறைக்குள் சென்று அழுவதைக் கண்டார். இது குறித்து அனாமிகாவிடம் விசாரித்தபோது, ​​தனக்கு பார்வையாளர்கள் யாருமே இல்லாத நிலையில், சக மாணவர்களின் பெற்றோர்கள் அடிக்கடி பள்ளிக்கு வந்து செல்வது குறித்து கிரிஜாவிடம் கூறினாள். 

அப்போது கிரிஜாவின் மனதில் விழுந்தது அந்த விதை. எனினும் தன் மகன் இதற்கு சம்மதிக்க வேண்டுமே என வேண்டிக் கொண்டாள். அனாமிகாவை நெருங்கிப் பிடித்து அவளது நலத்தை உறுதி செய்வதைப் பற்றி சொன்னாள். இந்த வாக்குறுதியின் வார்த்தைகள் அத்தனை ஆழமானவை. உனக்கு நான் இருக்கிறேன் என்கிற ஆறுதல் வார்த்தைகள் எத்தனைப் பேரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. 

அதன் பின்னர் அனாமிகாவை தனது சொந்த வீட்டிற்கு மருமகளாக அழைத்துச் செல்ல முடிவு செய்தார் கிரிஜா. அனாமிகா இப்போது உதய கிரிஜாவின் மகன் விஷ்ணுவின் மனைவி.

இது குறித்து பேசிய உதய கிரிஜா, “அவள் என் மருமகள் அல்ல, என் மகள். அவளைக் கவனிக்க யாரும் இல்லை. அவரது பாட்டி இறந்த பிறகு, அவரது உறவினர்கள் கூட அனாமிகாவை அழைத்துச் செல்ல மறுத்து விட்டனர். விஷ்ணு அவளை நன்றாக கவனித்துக் கொள்வான் என்று நான் மனதார நம்புகிறேன். பல வருடங்களாக, அவளுடைய அக்கறையையும் அன்பையும் பார்த்து, அவள் என் மகனுக்கு ஏற்ற பெண் என்று முடிவு செய்தேன். என் மகனும் திருமணத்திற்கு சம்மதித்து அனாமிகாவிடம் கருத்து கேட்டபோது அவளுக்கும் எந்த வருத்தமும் இல்லை. நான் ஆதரவற்றோர் இல்லத்தின் தலைவரிடம் என் முடிவை சொன்னேன், அவர் என்னை ஊக்கப்படுத்தினார். 

விஷ்ணு துபாயில் பணிபுரிகிறார். வரும் டிசம்பரில் துபாயில் இருந்து கேரளா திரும்புகிறார். அனாமிகாவை உடன் துபாய்க்கு அழைத்துச் செல்லும் வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றார் உதய கிரிஜா.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!