விவசாயக் கடன் ரூ. 11.61 கோடியை தள்ளுபடி செய்து அரசாணை... புதுவையில் விவசாயிகள் உற்சாகம்!
புதுச்சேரியில் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் 1,579 விவசாயிகள் பெற்றிருந்த விவசாயக் கடன் ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த 2021-22 புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படும் பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த நடவடிக்கைகளுக்காக விவசாய உறுப்பினர்கள் பெற்று 31.3.2022 வரையிலான காலத்திற்கு திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ள அசல் வட்டி மற்றும் அபராத வட்டி அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் 1,579 சிறு / குறு விவசாயிகள் பெற்ற கடன் தொகை ரூ. 11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அனைத்து பிரதம கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் புதுவை மாநில கூட்டுறவு வங்கி உடனடியாக மேற்படி விவசாயிகளின் கடன் கணக்குகளை நேர்செய்து புதிய விவசாய கடன் வழங்க அறிவுறுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி கடிதம் தீபாவளிக்கு பிறகு நடைபெற உள்ள அரசு விழாவில் துணைநிலை ஆளுநர். முதல்வர், அமைச்சர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!