பட்டாசு படுத்தும் பாடு... டெல்லி, மும்பை, சென்னையில் மோசமான நிலையில் காற்றின் தரம்!

 
மூச்சு திணறும் தமிழகம்!! முக்கிய நகரங்களில் அதிகரித்த காற்று மாசு!!


 நேற்று அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை விமரிசையாக  கொண்டாடப்பட்டது. கடந்த சில நாள்களாக அனைத்து பகுதிகளிலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுக்கு தள்ளப்பட்டதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லி மாசு காற்று வாகனம் பனி

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தியாவிலேயே தில்லி ஆனந்த் விஹார் பகுதியில் அதிகபட்சமாக காற்றின் தரம் 396 ஆக பதிவாகி இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.காற்றின் தரம் மிக  மோசமான நிலையை எட்டியிருப்பதால்  மும்பை நகரின் சில பகுதிகளில் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது.

டெல்லி காற்று மாசு

அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் நகரமும் புகை மண்டலாக காட்சியளிக்கிறது.  தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக, தேசியத் தலைநகரில் காற்று மாசு கணிசமாக அதிகரித்த நிலையில், இன்று மிகவும் மோசமான பிரிவுக்கு தள்ளப்பட்டது. சென்னையில் தீபாவளி நாளான நேற்று காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்றின் தரம் 158 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!