உஷார்... பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்கார முயற்சி... 2 இளைஞர்கள் கைது!

கொல்லம் கொட்டியத்தைச் சேர்ந்த பைஜூ மற்றும் பரவூரைச் சேர்ந்த ஜிக்கோ ஷாஜி ஆகிய இருவரும் வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர். ஜிக்கோ ஷாஜி மீது ஏற்கெனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகே கேபிள் வேலைக்காக சென்றுள்ளனர். வீட்டில் இளம்பெண் தனியாக இருந்துள்ளதை அறிந்துள்ளனர். இளம்பெண்ணின் அண்ணன் வெளியே சென்றதும், இருவரும் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவள் அலறியதும் அவள் வாயில் துணியை அடைத்து மிரட்டியுள்ளனர். அவர்கள் கைகளில் இருந்து தப்பித்து அருகில் இருந்த வீட்டிற்கு ஓடிச் சென்று இளம்பெண் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இதையொட்டி காவல் நிலையத்திற்கு உடனடியாக அவர்கள் தகவல் கொடுத்தனர். இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!