'அல்லாஹு அக்பர் கோஷமிட அனுமதி இல்லை’.. பெண்களுக்கு புது உத்தரவு பிறப்பித்த ஆப்கான் அரசு!

 
ஆப்கானிஸ்தான் பள்ளி

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் 2021ல்  இருந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், வேலைக்குச் செல்வதற்குத் தடை, கல்வி மற்றும் பொது இடங்களுக்குத் துணையின்றிச் செல்வதற்குத் தடை என அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்தது.

 இந்நிலையில் பெண்கள் சத்தமாக தொழவோ, மற்ற பெண்கள் முன்னிலையில் குரான் ஓதவோ கண்டிப்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நல்லொழுக்கத் துறௌ அமைச்சர் காலித் ஹனபி கூறுகையில், வளர்ந்த பெண் குர்ஆன் வசனங்களை ஓதவும், மற்றொரு வளர்ந்த பெண்ணின் முன் சத்தமாக பிரார்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் பொதுவெளியில் மரண தண்டனை

மேலும் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட அனுமதி இல்லை. இஸ்லாத்தின் மார்க்கத்தை ஒருபோதும் கூறக்கூடாது. தொழுகைக்கு அழைப்பு விடுக்க பெண்களுக்கு அனுமதி இல்லை. எனவே, அவர்கள் பாடல்கள் பாடவும் அனுமதிக்கப்படவில்லை எனவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்நாட்டு பெண்கள் பெரும் மன உளைச்சலில் வாழ்ந்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!