‘அமரன்’ - தேசத்தின் பெருமை.. முழுமையான விமர்சனம்!

 
‘அமரன்’
‘அமரன்’ படம் தேசத்தின் பெருமை. எந்தவொரு இடத்திலும் நெருடல் கிடையாது. ஹீரோயிஸத்தைப் போற்றும் வகையில் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் இல்லை. ஆபாச டபுள் மீனிங் வசனங்கள், வாய்ப்புகள் இருந்தும் வன்முறைக் காட்சிகள் என தடம் மாறிக் கொண்டிருக்கிற தமிழ் சினிமாவின் போக்கை மடை மாற்றி ரசிகர்களிடையே தீபாவளி ரேஸில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. தெலுங்கிலும் படம் ஹிட்டடித்து வேட்டையன், கோட் படங்களின் வசூலை முந்தியிருக்கிறது. 

மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘அமரன்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இது வாழ்நாளுக்கான கேரெக்டராக இருக்கிறது. 

சிறுவயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேர்வது தான் முகுந்த் கனவு. கல்லூரியில் தனது ஜூனியர் மாணவியான இந்துவை காதலித்து பலக்கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கரம் பிடிக்கிறார். ராணுவத்தில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே லெப்டினென்ட், கேப்டன், மேஜர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெறுகிறார் முகுந்த்.

‘அமரன்’

காஷ்மீர் எல்லைப் பகுதியில் அல்டாஃப் பாபா எனும் பயங்கரவாதியை ஆப்ரேஷன் மூலம் கொல்கிறார். அல்டாஃப் பாபா மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக அடுத்தடுத்து சம்பவங்கள் நடைபெறுகிறது. பொதுமக்களை பணயம் வைத்து நடக்கும் இந்த ஆப்ரேஷனை முகுந்த் எப்படி எதிர்கொள்கிறார், தன்னுடைய அணியை அவர் எப்படி வழிநடத்துகிறார், குடும்பத்தின் மீது அவர் வைத்திருக்கும் அன்பு, காதல் மனைவி இந்து மீதான ப்ரியம் என நகர்கிறது ‘அமரன்’.

படத்தின் முதல் பாதி காதல், ராணுவத்தில் சேர்வது என  எமோஷனலாக நகரும் கதை அடுத்தடுத்து வேகமெடுக்கிறது. இராணுவம், ஆப்ரேஷன் என்பதாக மட்டுமில்லாமல் இந்து - முகுந்த் இடையிலான காதல் காட்சிகளையும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். 

இடைவேளை காட்சி பரபரவென்று தடதடக்கையில் க்ளைமாக்ஸ் காட்சி கண்களைக் குளமாக்குகிறது. மேஜர் முகுந்திற்கான சமர்ப்பணம் இந்தப் படம் என்பதை உணர்ந்து நடிப்பில் அடுத்த பாய்ச்சல் காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்துவிடம் உருகுவது, இராணுவத்தில் தன்னுடைய டீமை காப்பாற்றுவது என ஒவ்வொரு ப்ரேமிலும் சிவாவின் உழைப்பு தெரிகிறது. 

‘அமரன்’

சிவகார்த்திகேயன் , சாய்பல்லவி என இருவரும் போட்டி போட்டு நடித்திக்கிறார்கள். இந்து கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சாய்பல்லவி. இவர்கள் மட்டுமில்லாது முகுந்தின் அம்மா- அப்பா, இந்துவுடைய அம்மா, அப்பா, அண்ணன்கள் கதாபாத்திரங்கள், முகுந்தின் நண்பராக வரும் விக்ரம் சிங் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையில் மின்னலே பாடலும் பின்னணி இசையும் சிறப்பு.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!