உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பங்கள் வரவேற்பு...ஆட்சியர் அழைப்பு!

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக தகுதியுடையவர் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நலவாரிய உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையவர் என்பதற்கு ஆதாரமாக அவர் பணிபுரியும் பள்ளிவாசல்கள், மதராஸாக்கள் போன்ற நிறுவனத்திலிருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய 18 வயது பூர்த்தி செய்து 60 வயதுக்குட்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் மதராஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையவர்கள்.
மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் போன்று நலத் திட்டங்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுமான்மையினர் நலத்துறையிலும் வழங்கப்படும்.
நலத்திட்டங்கள்
கல்வி உதவித்தொகை:
(i) 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை மற்றும் ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.1,000/- 12ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி படிப்பு வரை ரூ.1,500/-.
(ii) விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ 1,25,000/-.
(iii) விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை அதிகபட்சமாக .1,00,000/-.
(iv) இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை. ரூ.30,000/-
(v) ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை ரூ.5,000/-.
(vi) திருமண உதவித்தொகை (ஆண்- ரூ3,000/- மற்றும் பெண்- ரூ.5,000/-).
(vii) மகப்பேறு உதவித்தொகை - ரூ 6,000/-.
(viii) கருச்சிதைவு / கருக்கலைவு உதவித்தொகை -ரூ. 3000/-
(ix) மூக்குக் கண்ணாடி செலவின தொகை ஈடுசெய்தல் ரூ. 750/-.
(x) முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,200/-. வீதம் வழங்கப்படும்.
இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்போர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்/மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வக்ஃப் கண்காணிப்பாளர்/ வக்ஃப் ஆய்வாளருக்கு விசாரணைக்கு அனுப்பி, தகுதியான விண்ணப்பங்கள் வக்ஃப் கண்காணிப்பாளர்/ வக்ஃப் ஆய்வாளர் பரிந்துரை பெற்று வரப்பெறும் விண்ணப்பதாரர் மட்டுமே உறுப்பினராக பதிவு செய்து கட்டணமில்லா அடையாள அட்டை வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுமான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!