8 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்.. மருத்துவமனையில் சிகிச்சை!

கடந்த மார்ச் மாதம், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டொமினிக், மைக்கேல் பாரெட், ஜீனெட் எப்ஸ், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இந்த 4 பேரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்வெளி வீரர்கள் இல்லாமல் கடந்த செப்டம்பர் மாதம் விண்கலம் பூமியை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, மில்டன் சூறாவளி விண்வெளி வீரர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவதை தாமதப்படுத்தியது. இதற்கிடையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என்ற இரண்டு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 8 நாட்கள் ஆய்வுக்காக சென்றனர். அவர்களும் பூமிக்குத் திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று.
ஆய்வுப் பணி 8 நாட்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது. மேலும், ஸ்பேஸ் எக்ஸ் சமீபத்தில் இரண்டு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. இந்நிலையில், மார்ச் மாதம் விண்வெளிக்குச் சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பத்திரமாக பூமியை அடைந்துள்ளனர். அவர்களின் விண்கலம் இன்று அதிகாலை மெக்சிகோ வளைகுடாவில் உள்ள புளோரிடா கடற்கரையில் கடலுக்குள் சென்றது. பின்னர், விண்வெளி வீரர்கள் படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!