158 பேர் உயிரிழப்பு... பலர் மாயம்.. மீட்பு பணிகள் தீவிரம்... ஸ்பெயினில் திடீர் வெள்ளத்தால் கதறும் மக்கள்.. தனித்தீவானது வலென்சியா நகரம்!
ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் மாயமாகி இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியடைய செய்கிறது.
நேற்று மாலை அவசரகால மீட்பு சேவைகளின் அறிக்கையின்படி ஸ்பெயினில் இதுவரை வெள்ளப்பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் வலென்சியா நகரில் கடந்த செவ்வாய் இரவு முதல் புதன்கிழமை இரவு வரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 155 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருந்த நிலையில் நேற்று மேலும் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் பலரைக் காணவில்லை என்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணியாளர்கள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி அடையாளம் கண்டு வருகின்றனர்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நேற்று வலென்சியாவில் உள்ள ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கான மையத்திற்குச் சென்று, கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கனமழை காரணமாக இரண்டு சுரங்கங்கள் இடிந்து தண்டவாளங்களை சேதப்படுத்தியதால், வலென்சியா மற்றும் மாட்ரிட் இடையேயான ரயில் போக்குவரத்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு சேவையில் ஈடுபடாது என்று ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே அறிவித்தார்.
ஏற்கெனவே சாலைப் போக்குவரத்து வெள்ளப்பாதிப்பு காரணமாக முற்றிலும் முடங்கிய நிலையில் வலென்சியா நகரம் தனித் தீவு போல் காட்சியளிக்கிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
