காசா போலியோ முகாம் மீது தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 6பேர் படுகாயம்!

 
காஸா

பலரைக் கொன்று, பணயக்கைதிகளாகக் கைப்பற்றிய இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக காசா மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில், ஆயிரக்கணக்கான ஹமாஸ் உறுப்பினர்களும், பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்,  ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காஸாவில் குழந்தைகளின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இஸ்ரேல்

இதன்படி காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 2 கட்டமாக நடத்தப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 4,51,216 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இந்த பகுதிகளில் இது 96 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், 3வது கட்டமாக மருந்து விநியோக முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த முகாம் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று இந்த முகாம் நடத்தப்பட்டது. இதற்காக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷேக் ரத்வான் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்றனர்.

இந்நிலையில் இந்த மையம் தாக்கப்பட்டது. இதில், 4 குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலியோ சொட்டு மருந்து முகாமுக்கு போர்நிறுத்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்தத் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சமீபத்திய தாக்குதல் குழந்தைகளுக்கு சுகாதார சேவை வழங்குவதன் புனிதத்தின் மீதான தாக்குதலாகும், என்றார். இதனால், இம்மையத்திற்கு பெற்றோர் வருவதில் இடையூறு ஏற்படும். இந்தப் பகுதியில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான நிபந்தனைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!