பச்சிளம் குழந்தையை ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை.. பெற்றோர்கள் செய்த கொடூரம்!

 
குழந்தை

அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புத்திமான் போரா. இவரது மனைவி சபிதா போரா. நிறைமாத கர்ப்பிணியான சபிதாவுக்கு அக்டோபர் 4ஆம் தேதி திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தையை இருவரும் ரூ.30 ஆயிரத்திற்கு விற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குழந்தை

குழந்தைகள் நலக் குழுவின் (சிடபிள்யூசி) தலையீட்டைத் தொடர்ந்து நேற்று குழந்தை மருத்துவர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட சிடபிள்யூசி தலைவர் ரூபாலி டெகா போர்கோஹைன் கூறும்போது, ​​“புதிமான் போரா ஒரு தினக்கூலித் தொழிலாளி. நிரந்தர வருமானம் இல்லை. இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிறந்த குழந்தை ரூ.30 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர்.  

போலீஸ்

குழந்தையை பெகு சோஹோரியா அழைத்துச் சென்றார். பாபுல் போரா மற்றும் திலீப் சைகியா ஆகியோர் இந்த குழந்தையை விற்பனை செய்யும் இடைத்தரகர்களாக இருந்தனர். இதுகுறித்து சில்பத்தூரைச் சேர்ந்த டாக்டர் சந்திரஜித் கூறியதை அடுத்து இந்தத் தகவல் எங்களுக்குத் தெரியவந்தது. அதன்படி நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,'' என்றார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web