சீன லைட்டர் இறக்குமதிக்குத் தடை... கனிமொழி எம்.பிக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நன்றி!
சீன லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்ததற்கு உறுதுணையாக இருந்த தூத்துக்குடி மாவட்ட எம்.பி., கனிமொழிக்கு கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்தனர் சீனாவிலிருந்து சிகரெட் லைட்டர் உதிரிபாகங்கள் மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில் பாதிப்படைந்தது.

இதனால் பல இன்னல்களுக்கு ஆளான தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சீன லைட்டர்கள், உதிரி பாகங்களைத் தடை செய்ய வேண்டும் எனத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் மனு அளித்திருந்தனர்.

இது குறித்து பலமுறை கனிமொழி கருணாநிதி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியும், துறை சார்ந்த அமைச்சர்களைச் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். இதன் விளைவாக, கடந்த 13ம் தேதி சீன பொருட்களான சிகரெட் லைட்டர் உதிரிபாகங்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. இதையடுத்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கனிமொழி எம்பியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
