உஷார்!! அடுத்த 5 நாட்களுக்கு 12 மாவட்டங்களுக்கு “ஹை அலர்ட்”!!

 
rain

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக,நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது.   இது குறித்து இந்திய ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உ.பி கன மழை

அதன்படி, தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவித்துள்ளது.  சென்னை,   காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழையும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தற்போது மிதமான மழையும் பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  

மழை

மழை காரணமாக  ஜூன் மாதத்தில் 1991மற்றும் 1996ம் ஆண்டுக்கு பிறகு  27 ஆண்டுகளுக்கு பிறகு  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது ஆச்சரியமான விஷயம் தான் என்கிறார் வெதர்மேன் பிரதீப்ஜான்.  நடப்பு கல்வியாண்டை பொறுத்தவரை  கடும் வெயில் காரணமாக இந்த மாதம் 12 நாட்கள் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஜூன் 12ம் தேதி  6-12ம் வகுப்பு வரையும்,   1-5ம் வகுப்புகளுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால்  1ம் தேதியில் இருந்து 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் அதன்பின் மீண்டும் 12, 14 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.  இந்நிலையில் மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. தொடர் கனமழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மழை கொட்டித் தீர்த்தாலும் அலுவலகப் பணிக்கு செல்பவர்கள் அலுவலகம் செல்ல வேண்டியது கட்டாயம். வீட்டில் இருந்தே படியே வொர்க் பர்ம் ஹோம் பார்ப்பவர்களுக்கு சற்று ஆறுதலான விஷயம்.    கனமழை காரணமாக அலுவலகம் செல்ல விரும்பினாலும் மின்னல் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வ வருகின்றன. அடுத்த 2 மணி நேரத்திற்கு தீவிர மின்னல்கள் இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.  

இந்த மின்னல்கள் முகில் - புவி வகை மின்னல்கள் ஆகும். அதாவது மேகத்தில் இருந்து பூமியை நோக்கி மின்னல்கள் அடிக்கும் வகை ஆகும். சென்னைக்கு அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் இருந்து சென்னையை நோக்கி மேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  கரு  மேகங்கள்  வலிமை இழக்காமல் தொடர்ந்து மின்னூட்டம் பெற்ற முழு வலிமையோடு சென்னைக்கு வருவதால் தொடர் மின்னல்கள் ஏற்பட்டு வருகின்றன.  இந்த மின்னல்களுக்கு இடையே அலுவலகம் செல்வது பாதுகாப்பு இல்லை என்பதால் அலுவலக ஊழியர்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அதோடு மழையால் தண்ணீர் தேங்கிய காரணத்தால் சென்னையில் பல பகுதிகளில்  குறிப்பாக கத்திப்பாரா உள்ளிட்ட முக்கிய சாலைகள் கூட மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாகவும் அலுவலக ஊழியர்கள் அலுவலகம் செல்வது பெரும் சவாலாகி உள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web