பைக் சாகசத்தில் விபரீதம்.. 3 இளைஞர்கள் பலி; 2 பேர் படுகாயம்!
டூ வீலர் சாகசத்தில் ஈடுபட்ட போது இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்திற்குள்ளானதி. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் கூடலூரில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட போது, இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூடலூர் ஆசாரி தெருவை சேர்ந்தவர்கள் லிங்கேஷ் (24),சேவாக் (23), சஞ்சய் (22), மோனிஷ் (22), கேசவன் (22). நண்பர்களான இவர்கள் ஐந்து பேரும் வெவ்வேறு வெளியூரில் தங்கி வேலை செய்கிறார்கள். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் நேற்று மாலை கம்பம் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்.
இதில் மூன்று பேர் ஒரு பைக்கிலும், இரண்டு பேர் மற்றொரு பைக்கிலும் ஏறிச் சென்றனர். அதி வேகமாக செல்வது, திடீரென பிரேக் பிடிப்பது, பைக்கின் முன் பக்க வீலை தூக்கியபடி செல்வது உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதனிடையே இரண்டு டூவீலர்களும் எதிரெதிரே வேகமாக வந்தன. அப்போது ஆதி சுஞ்சனகிரி மடத்தின் அருகே அதிவேகமாக வந்த போது எதிர்பாராத விதமாக இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் பயங்கரமாகமோதியது. இதில் இரண்டு வாகனங்களும் முற்றிலும் நொறுங்கியது. இந்த விபத்தில் லிங்கேஷ் மற்றும் சேவாக் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மூன்று பேரில் சஞ்சய் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
மோனிஷ், கேசவன் ஆகியோர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபாவளி கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த போது நண்பர்கள் வந்திருந்த நிலையில் நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விபத்து குறித்து கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
