லாரி மீது பைக் மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழப்பு!

 
விபத்து
 

தூத்துக்குடி மாவட்டத்தில், எப்போதும் வென்றான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகில் உள்ள வாலம்பட்டி கிராமம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயன் மகன் அர்ஜுன் (39).

விபத்து

இவர் எட்டையபுரத்தில் இருந்து எப்போதும் வென்றான் கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் வரும்போது முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதில் பைக் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அர்ஜுன் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊரை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சீனிவாசன் (50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web