ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய பேருந்து.. 5 பேர் அடுத்தடுத்து பலியான சோகம்!

 
சித்தூர் ஆட்டோ விபத்து

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்து நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காதர்வல்லி (35), நூருல்லா (32), புஜ்ஜம்மா (60), பகீரம்மா (65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து ராயச்சோட்டி சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி கிருஷ்ண மோகன் கூறுகையில், "பைலாரில் இருந்து ராயச்சோட்டி நோக்கி வந்த பேருந்து, எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியதில், ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

காயமடைந்த இருவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.பேருந்து சித்தூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web