மேம்பாலத்தின் சுவரில் மோதி விபத்துக்குள்ளான பேருந்து.. 12 பேர் பலி.. 36 பேர் படுகாயம்!

 
சிகார் விபத்து

இன்று மதியம் ராஜஸ்தான் மாநிலம் சலசாரில் இருந்து லஷ்மங்கருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சிகார் மாவட்டத்தில் சாலையில் திரும்பும் போது பேருந்து மேம்பாலத்தின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 36க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.


இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் அதிகாரி புவன் பூஷன் யாதவ் கூறுகையில், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லஷ்மங்கர் மற்றும் சிகார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!