நள்ளிரவில் கோர விபத்து... 2 கல்லூரி மாணவிகள் உட்பட 3 இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!
நேற்று நள்ளிரவு அவிநாசி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டத்தில் 2 கல்லூரி மாணவிகள் உட்பட 3 இளம்பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மருதமலை சாலை ஐஓபி காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள்கள் அபர்ணா (26), ஹேமா(21). அபர்ணா, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஐஐஎம்மில் 2ம் ஆண்டு எம்.பிஏ. படித்து வருகிறார். மற்றொரு மகளான ஹேமா கோவை தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ., படித்து வருகிறார்.
கோவை ஆர்.எஸ்.புரம் ஐஸ்வர்யா காம்பவுண்டை சேர்ந்த அபர்ணாவின் தோழி மோனிஷ் (28). இவரது காரில் 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இருந்து கோவை நோக்கி நேற்று நள்ளிரவு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே சிமெண்ட் கிடங்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இவர்களது கார் பயங்கர வேகத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பெண்களும் உயிரிழந்தனர்.
இதையடுத்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் அவிநாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். லாரி ஓட்டுநரான கோவை கரும்புக்கடையை ரகுமான்கான் (24) என்பவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கல்லூரியில் பயிலும் சகோதரிகள் 2 பேர் உட்பட 3 இளம்பெண்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!