மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிரடி!

 
சுரேஷ் கோபி

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது திருச்சூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன்பு அதிகாலை 3 மணிக்கு கேரள மாநிலத்தில் திருச்சூர் பூரம் நடைபெற்றபோது திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக சுரேஷ் கோபி இருந்துள்ளார்.

 சுரேஷ் கோபி

நோயாளிகளை அழைத்து வருவதற்கு மட்டும் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் வேனில் பூரம் நடக்கும் இடத்திற்கு வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்

இதுகுறித்து திருச்சூர் சிபிஐ கட்சித் தலைவர் சுமேஷ் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அளித்த புகாரின் பேரில், திருச்சூர் மாவட்ட போலீஸார் மற்றும் மோட்டார் வாகன அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். IPC பிரிவு 279/34 மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!