பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி மயங்கி சரிந்து பலி... தேர்வு எழுதிய போது சோகம்!

 
ஈரோடு

 ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரம் பகுதியில் வசித்து வருபவர்   முருகானந்தம் - சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு 13 வயதில் ஹரிணி, 11 வயதில்  ஹரிஷ் தேவசேனாதிபதி என  ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். சாந்தி அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஆதர்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் மகள் ஹரணி 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஹரிணி உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்தார்.  

கேரள மாணவி பலி

அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இன்று உடல்நிலை சரியானதை அடுத்து தனது தாயாரோடு பள்ளிக்குச் சென்றிருந்தார்.  இன்று பள்ளியில் வழக்கம் போல மாணவ, மாணவிகள் மாதாந்திர தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது சிறுமி ஹரிணி திடீரென மயங்கி சரிந்தார்.  வகுப்பு ஆசிரியர் கொடுத்த தகவலின் பெயரில் பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்  தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி ஹரிணி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச போலீஸ்


 இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில்  உடல் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு  பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!