சரிந்து விழுந்த நிழற்குடை !! 4 பெண்கள் படுகாயம்!!

 
சரிந்த நிழற்குடை

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை சாலைகளில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் ஏராளம். இது எதற்கும் வழியில்லாதவர்கள் தான் பொது போக்குவரத்தான பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அங்கும் பேருந்துகளில் ஏற்படும் பிரச்சனைகள், காலதாமதமாக வரும் பேருந்துகள், நடத்துனர், ஓட்டுனருடன் பிரச்சனை எனதினம் தினம் ஒவ்வொரு பிரச்சனைகள். இதெல்லாம் பேருந்து ஏறிய பிறகு உருவாகுபவை. பேருந்தில் ஏறும் முன்பே ரிலாக்சாக அமர்ந்திருக்கும் நிழற்குடையே சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டால்  பயணிகளின் கதி என்ன? அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடைபெற்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரிந்த நிழற்குடை

சென்னை பெசன்ட் நகரில் வண்ணான் துறை பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பேருந்து நிலையத்தில் நேற்று மாலை பேருந்துக்காக 6 பயணிகள் காத்திருந்தனர். அப்போது திடீரென பேருந்து நிறுத்த நிழற்குடை சரிந்து பேருந்துக்காக காத்திருந்த 4 பெண்கள் மீது விழுந்தது. இதில் 4 பெண்களும் படுகாயம் அடைந்தனர்.  அந்த வழியாக சென்றவர்கள்  உடனடியாக சிக்கிக் கொண்டிருந்த  4 பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.   விசாரணையில் காயமடைந்த பெண்கள் திருவெற்றியூரில் வசித்து வரும் 69 வயது  கோகிலா , 40வயது திருவான்மியூர் ஜெயலட்சுமி, 49 வயதில்  வியாசர்பாடி  முத்துலட்சுமி, 60 வயது  வியாசர்பாடி  பூங்கொடி என்பது தெரியவந்தது. மேலும் இந்த பேருந்து நிலைய நிழற்குடை கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் வேளச்சேரி அதிமுக எம்எல்ஏ அசோக் மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டது தெரியவந்தது.

போலீஸ்

அத்துடன் நிழற்குடை தாங்கியிருந்த இரும்பு துருப்பிடித்து இருந்ததால் சரிந்து விழுந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்து குறித்த  சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.  சிசிடிவியில் நிழற்குடை சரிந்து விழுந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் பதறி அடித்து ஓடி வந்து சிக்கிக்கொண்டிருந்த பெண்களை மீட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web