அதிர்ச்சி வீடியோ... டூவீலர் மீது மாடு மோதி கல்லூரி மாணவி படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!

 
திருநெல்வேலி
 


திருநெல்வேலியில் மாநகராட்சிக்குட்பட்ட திருமால் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது, திடீரென சாலையில் சுற்றித் திரிந்த மாடு மோதியதில் கல்லூரி மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சமீப காலமாக சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நாய்களும், மாடுகளும் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது. நாய்க்கடிக்கு உள்ளாகி பலர் தமிழகத்தில் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், நடந்து செல்பவர்களும், பைக்கில் செல்பவர்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். 

மாநகராட்சி நிர்வாகத்தினர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை சிறைப்பிடிப்பது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியில் திருமால் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் மீது மாடு மோதிய விபத்தில் படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சாலைகளில் திரியும் மாடுகளால், தொடர் விபத்துகள் ஏற்படுவது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி சாலைகளில் சுற்றித் திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீதும், நாய்களை சாலையில் சுற்றித்திரிய அனுமதிக்கும் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!