காமன்வெல்த் 2026 | கேள்விக்குறியான இந்தியாவின் பதக்கப்பட்டியல்... மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 9 போட்டிகள் நீக்கம்... இந்தியர்கள் ஏமாற்றம்!
காமன் வெல்த் கேம்ஸ் 2026 போட்டிகள் ஜூலை 23 முதல் ஸ்காட்லாண்ட் கிளாஸ்கோவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து மல்யுத்தம், ஹாக்கி, பேட்மிட்டன், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான், பீச் வாலிபால் மற்றும் ரக்பி செவன்ஸ் ஆகிய போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன். இதில் மல்யுத்தம் போட்டி நீக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை அதிக பதக்கங்கள் மல்யுத்த போட்டியில் தான் கிடைக்கும். இதுவரை நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 114 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.அதில் 49 தங்கப்பதக்கங்கள் 39 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 26 வெண்கல பதக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பேட்மிட்டன் போன்ற போட்டிகளிலும் இந்தியா அதிகமாக பதக்கங்களை வென்று வந்தது. ஸ்காட்லாண்டில் நடைபெற உள்ள காமன்வெல்த் கேம்ஸ் 2026 போட்டியில் அந்த நாட்டில் இது போன்ற போட்டிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால் காமன்வெல்த் கேம்ஸ் அமைப்பு இந்த விளையாட்டுகளை நீக்கியுள்ளது. இதனால் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கப்பட்டியல் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மல்யுத்தம், ஹாக்கி போன்ற போட்டிகளை நடத்தி இருந்தால் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!