முழுவீச்சில் மாநாட்டு பணிகள்.. 234 தொகுதிகளுக்கும் முக்கிய அப்டேட் கொடுத்த தவெக தலைவர்!

 
விஜய்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்துள்ள தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது. எனவே, மாநாட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், மாநாட்டுக்கு முன் முதல் அறிவிப்பாக தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு பிறப்பித்தார். கர்ப்பிணிகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டவர்களின் நலன் எனக்கு மிகவும் முக்கியமானது. மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட பயணம் அவர்களுக்கு உடல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தலாம்.


எனவே, தங்கள் குடும்ப உறவுகளுக்காக இவ்வளவு கஷ்டமான தூரத்துக்கு வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். அதன்பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கையாக, 234 தொகுதிகளுக்கும் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கை மாநாட்டுக்கான சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் வழக்கறிஞர்கள் விவரங்களை விஜய் அறிவித்துள்ளார்.

இந்த தற்காலிக தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர்கள் மாநாட்டிற்கு வரும் கட்சி உறுப்பினர்களுக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், அதை ஒட்டிய சட்டமன்ற தொகுதிகளிலும் தேவையான வழிகாட்டுதல்களையும் சட்ட உதவிகளையும் வழங்குவார்கள்” என்று விஜய் அந்த அறிக்கையில் அறிவித்துள்ளார். மாநாடு தொடங்கும் முன்பே அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய விஜய், பேசுபொருளாக மாறினார். தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாநாட்டிற்காக நியமிக்கப்பட்ட தற்காலிக தொகுதி பொறுப்பாளர் வழக்குரைஞர்களின் விவரங்கள் அறிக்கையில் உள்ளன.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!