விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ்!
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று முதல் அரசியல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சில குறைபாடுகள் இருந்தபோதிலும் வெற்றிகரமாக நடந்து முடித்தி முடிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும் மொழியிலும் இருந்தது. அந்த வகையில், அவரது பேச்சு எளிமையாக இருப்பதாக பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது.😊
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) October 28, 2024
அதே நேரம், விஜய்யின் பேச்சு மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் பல மாற்றங்கள் உருவாகலாம் எனக் கூறுகின்றனர். திமுக vs அதிமுக என இருந்த இருமுனை அரசியலுக்கு வேட்டு வைப்பதாக அவரின் உரை அமைந்துள்ளது. 2026 இருமுனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி, இபிஎஸ் தலைமையில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, விஜய் தலைமையில் தவெக கூட்டணி, சீமானின் நாதக என தமிழகத்தில் 5 முனை போட்டி உருவாகி இருப்பதாக சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விஜய்யின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது X தள பக்கத்தில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” எனக் கூறியுள்ளார்.
‘பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணிக் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு வழங்கப்படும்’ என விஜய் கூறியிருந்தார். ஏற்கனவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என வலியுறுத்தி வரும் காங்கிரஸ், விசிக கட்சிகள் விஜய் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
