சர்ச்சை வீடியோ... அமெரிக்காவில் அடுத்த அதிர்ச்சி... கமலா ஹாரிஸ் கார் செல்கையில், எதிர்புறம் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற நபர்!

 
கமலா ஹாரிஸ்
 

அமெரிக்காவில் அடுத்த அதிர்ச்சியாக மில்வாக்கியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர் கமலா ஹாரிஸின் வாகன அணிவகுப்புகள் சென்றுக் கொண்டிருந்த நிலையில், சாலை விதிகளைக் காற்றில் பறக்கவிட்டப்படி எதிர்திசையில் கார் ஓட்டிச் சென்றது பரபரப்பைக் கிளப்பி, பாதுகாப்பு காரணங்களைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. 

குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் அந்த நபர், மில்வாக்கியில் கமலா ஹாரிஸின் வாகனப் பேரணியை ஏறக்குறைய தாக்குவது போல எதிர்புறத்தில் காரை ஓட்டிச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. 

கமலா ஹாரிஸ்

கடந்த  திங்கட்கிழமை இரவு மில்வாக்கியில் கமலா ஹாரிஸ் சென்றுக் கொண்டிருந்த காருடன் 20க்கும் மேற்பட்ட கார்கள் சென்றன. அப்போது 55 வயதான உள்ளூர் மனிதர் ஒருவர், செயின்ட் பால் அவென்யூவில் I-794ன் தவறான பாதையில் கமலா ஹாரிஸ் மற்றும்  மற்றும் அவருடன் சென்றவர்களின் வாகனங்களைக் கடந்து எதிர்புறமாக மோதுவதைப் போல காரை ஓட்டிச் சென்றார். 

அணிவகுத்து சென்றுக் கொண்டிருந்த கார்களில், ஒரு காரில் கமலா ஹரிஸ் விமான நிலையத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார். இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!