நெகிழ்ச்சி பதிவு... கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கான் ஆண்குழந்தைக்கு தந்தையானார்!

 
சர்ப்ராஸ்கான்


 
இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு ஆண் குழந்தைக்கு தந்தையானார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் சர்ஃப்ராஸ்கான் தனது குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்ஃப்ராஸ் கானுக்கு கடந்த ஆண்டு  ரோமனா ஜாஹூருடன் திருமணம் நடைபெற்றது.  

சர்ப்ராஸ்கான்


சர்ஃப்ராஸ் கான் கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் அனில் கும்ப்ளேவிடம் இந்திய அணியின் தொப்பியை வாங்கும் போது அவரது மனைவியும், தந்தையும் கண்ணீர்விட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பெங்களூருவில்  நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃப்ராஸ் கான் 150 ரன்கள் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்.


இதுவரை இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள  சர்ஃப்ராஸ் கான் 350 ரன்கள் குவித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மாற்றுவீரராக இருந்த சர்ஃப்ராஸ் கானுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இன்று அக்டோபர். 22ம் தேதி  தனது 27 வது பிறந்தநாளை கொண்டாடும் சர்ஃப்ராஸ் கானுக்கு   கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web