சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்தது... வணிகர்கள் அதிர்ச்சி!

 
வணிக சிலிண்டர்

கடந்த சில மாதங்களாகவே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்து வணிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான ஒரு சிலிண்டர் விலை ரூ.1964.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவகங்கள், தேநீர் கடைகள், தின்பண்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இந்த மாதமும் உயர்த்தியுள்ளன. சென்னையில் இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.61.50 காசுகள் உயர்ந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கப்படுகின்றன.

சிலிண்டர் முதல் ஏடிஎம் வரை விலையேற்றம்! புத்தாண்டு தினத்தில் அமல்!!

கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 4 மாதங்களாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது. அக்டோபர் மாதமும் சிலிண்டர் விலை ரூ.48 உயர்த்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நவம்பர் 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்து ஒரு சிலிண்டர் விலை ரூ.1,964.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்வானது உடனடியாக அமலுக்கு வந்தது. 

கேஸ் சிலிண்டர் அதிரடி உயர்வு!!!..

அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.818.50க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது. 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web