சர்ச்சைகளுக்கு மத்தியில் மகளுக்கு பெயர் சூட்டும் விழா.. யூடியூபர் இர்ஃபான் போட்ட அடுத்த வீடியோ!

யூடியூபர் இர்ஃபான் புட் ரிவீயூ செய்து பிரபலமானதை விட சர்ச்சைகளால் பிரபலமானவர். சில வருடங்களுக்கு முன் இவரது கார் விபத்து அதிகம் பேசப்பட்டது. பிரச்சனை தீரும் முன், இர்ஃபான் தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து ஒரு பார்ட்டியை கொண்டாடி அதை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை நீக்கிவிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையின் முகத்தை முதன்முதலில் காட்டினார். அதோடு, தனது குழந்தையின் பிறப்பு வீடியோவை யூடியூப்பில் வெளியிடப்போவதாக கேப்ஷன் கொடுத்து ரசிகர்களுக்கு நோட்டீஸ் கொடுத்திருந்தார். அவர் கூறியது போல் மறுநாள் அவரது குழந்தையின் பிறப்பு வீடியோ வெளியாகி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தனது குழந்தை பிறக்கும் போது தனது மனைவியின் கஷ்டங்களையும், கவலையையும் காட்டிய இர்ஃபான் இறுதியாக தனது குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை தானே வெட்டிக் கொண்டார். அதையும் வீடியோவில் காட்டியுள்ளார். இந்த சர்ச்சை தான் பெரிய அளவில் தற்பொது வெடித்துள்ளது. இர்பான் செய்தது தப்பு, இப்படி ஒரு வீடியோ போட்டால், அவரைப் போன்ற யூடியூப்காரர்களும், என் மனைவிக்கு பிரசவம் பார்க்கும் வீடியோவை வெளியிடப் போகிறோம் சொன்னால் டாக்டரின் கதி என்ன? என பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல குழந்தையின் தொப்புள் கொடியை மருத்துவர் வெட்ட வேண்டும். அதனால் தான் வீட்டில் கூட யாரும் பிரசவம் செய்யக்கூடாது, அனைவருக்கும் மருத்துவமனையில் பிரசவம் செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் அவர் குழந்தையின் தொப்புள் கொடியை துணிக்கடை ரிப்பன் போல வெட்டுகிறாரா என்று பலர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த பிரச்சனைகளை மீறி இர்ஃபான் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. பெயர் சூட்டும் விழா காணொளியில் தனது மகளின் பெயரை அறிவித்தார். அதாவது, தனது மகளுக்கு இஃபா என்று பெயர் வைத்துள்ளார். அதாவது ஆங்கிலத்தில் Richness என்றும் தமிழில் மதிப்புமிக்கவள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!