திரும்பும் திசையெல்லாம் மரணஓலம்... கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு!

பீகார் மாநிலத்தில் சிவான் மாவட்டத்தில் 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலர் மயங்கி சரிந்தனர். சிலருக்கு கண்பார்வை பறிபோனது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி கள்ளச்சாரயம் காய்ச்சுபவா்கள், விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பைகுந்த்பூரில் கள்ளச் சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் அறிக்கை கிடைத்த பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என டிஐஜி தெரிவித்துள்ளார். சிவான், சரண் மற்றும் பாட்னா மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல் என முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.இச்சம்பவத்தில் தொடர்புடைய 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு 200 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு அதிகரித்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!