குழாயடி சண்டையில் பரிதாபமாக பலியான உயிர்.. எதிர் வீட்டு பெண் அதிரடியாக கைது!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த தவசுகண்ணு (55) மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த சண்முகச்சாமி மனைவி அன்னதுரைச்சி (60) இருவரும் எதிர் வீட்டில் வசிப்பதால், அப்பகுதியில் குடிநீர் குழாய் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பயன்படுத்தப்பட்ட நீர் செல்வதிலும் தகராறு இருந்துள்ளது. அதேபோல இன்றும் தண்ணீர் எடுக்கச் சென்றபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று குடிநீர் குழாயில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தவசுகண்ணுவை சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தவசுகண்ணுவின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ள தவசுகண்ணுவின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். பனவடலிசத்திரம் காவல் துறையினர் அண்ணாதுரைச்சியை (60) கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!