மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசு... காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க.. நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு!

 
விஜய்

தமிழக அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து தனது பாராட்டுக்களையும், பரிசுகளையும் வழங்கி வரும் நடிகர் விஜய், 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார். இரண்டாம் இடம் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பரிசளித்தார். இன்றைய நிகழ்ச்சியில் மேடையில் நடிகர் விஜய் பேசும் போது, என்னுடைய கனவு எல்லாம் சினிமா நடிப்பு தான் ஒரு வேளை... என்று கொஞ்சம் நிறுத்தி.. அதை விடுங்க அது இப்ப எதுக்கு? வேணாம் என பேசியது, நடிகர் விஜய் அரசியலுக்கு இப்போது வர போவதில்லை என சூசகமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் ஆரவாரமிட்ட அதே நேரத்தில், இப்போதைக்கு அரசியலுக்கு வரப் போவதில்லை என்றால், வருவதாக நினைத்து செலவு செய்தது வீணப்போச்சே என மன்ற நிர்வாகிகள் சோகத்தில் ஆழ்ந்தனர். அனைவரும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள். பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றி படியுங்கள் என்று நடிகர் விஜய், மாணவ, மாணவிகளிடையே பேசினார். 

இன்று நடிகர் விஜய் தலைமையில் நடைபெறும் கல்வி விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மொபைல் போன், கேமரா இவைகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற சர்ச்சை பதிவுகள் மற்றும் விவாதங்களை தவிர்ப்பதற்காக செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

சமீபத்தில் உலக பட்டினி தினத்தில்  விஜய் மக்கள் இயக்கம் 234 தொகுதிகளிலும் உணவு வழங்கி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை முன்னெடுக்கவும் மேலிடத்திலிருந்து உத்தரவு பறந்துள்ளது. 

விஜய் விருது வழங்கும் விழா

இந்நிலையில் இன்று ஜூன் 17ம் தேதி மாணவர்களை நடிகர் விஜய் நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தல் .நலத்திட்ட உதவிகள் என விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் அடியெடுத்து வைக்கிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தவர்களைப் பாராட்டிய நடிகர் விஜய், இம்முறை வரும் சட்டமன்ற தேர்தலில், அப்படி மன்றத்தில் இருந்து யாராவது ஒருவர் எம்.எல்.ஏ. வாக வென்றால் நன்றாக இருக்கும் என்று நெருக்கமானவர்கள் விஜய்யின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்கள். 

விஜய்

"அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3  இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு "தளபதி விஜய்" அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்துவார் எனக் கூறியுள்ளார்.  

இந்த விழாவில் தொகுதி வாரியாக முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ25,000 ரொக்க பரிசும், 2ம்  இடம் பிடித்தவர்களுக்கு ரூ.15,000 ரொக்கப்பரிசும், 3ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ10,000 பரிசும் காசோலையாக வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன்  விழாவிற்கு வருகை தந்துள்ள மாணார்கள் மற்றும் பெற்றோர்களூக்கு காலை, மதிய உணவு மற்றும் வெளியூரில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்குவதற்கான மண்டப செலவு அனைத்தையும் விஜய் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த விழாவிற்காக ரூ2 கோடி வரையில் நடிகர் விஜய் செலவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web