போட்றா வெடிய... 200 யூனிட் வரை மின்சார கட்டணம் தள்ளுபடி... அதிரடி அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி உத்தரவிட்டது. இதையொட்டி தமிழக அரசும் தீபாவளி போனஸ் அறிவித்தது. தற்போது, தீபாவளியை முன்னிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்யும் சிறப்பு முயற்சியை அரசு அறிவித்துள்ளது.

மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களின் 200 யூனிட் வரையிலான நுகர்வுக்கான கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொருளாதார ரீதியாக பின்தங்கிய தனிநபர்களுக்காக அவர்களின் மின்சார கட்டண சுமையை குறைக்க உதவும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தின் மின்கட்டணம் 200 யூனிட்டுக்குள் இருந்தால், மொத்தக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும். 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இது பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர் மற்றும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பினால், முதலில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதற்கு தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, மின்சார பில், வருமானச் சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு எண் ஆகியவை . இத்திட்டம் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை மேலும் மகிழ்ச்சியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
