சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்... முதல்வர் அறிவிப்பு!

 
தீபாவளி போனஸ்

 தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியளார்களுக்கு 2023-2024 ம் ஆண்டுக்கான  தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில்  15 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன.

சர்க்கரை ஆலை

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதல்வர் 2023-2024 ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிட்டுள்ளனர்.  அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி – II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆவைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 11.57% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.57% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

கரும்பு விவசாயிகளுக்கு இனி கவலை இல்லை


இதன் மூலம் தமிழகத்தில்  15 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5,775 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர்.  மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.411.90 இலட்சங்கள் செலவினம் ஏற்படும்.” எனத் தெரிவிக்கப்படுள்ளது. 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web